'அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்': Zoho ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி கடிதம்
செய்தி முன்னோட்டம்
பிரபல மென்பொருள் நிறுவனமான சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களுக்கு எழுதியுள்ள ஒரு பகிரங்க கடிதம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் இந்தியர்கள் மீதான பார்வை மாறி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களைத் தாய்நாட்டிற்கு திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு கருத்துக்களையும் பெற்றுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னாட்சிக்கு இது போன்ற முன்னெடுப்புகள் அவசியம் எனப் பலர் வரவேற்றுள்ளனர். அதே நேரம், இந்தியாவில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படாமல், திறமையாளர்களைத் திரும்புமாறு கோருவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனச் சிலர் பதிவிட்டுள்ளனர்.
அம்சங்கள்
"பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை"
ஸ்ரீதர் வேம்பு தனது கடிதத்தில் முன்வைத்துள்ள முக்கியக் கருத்துக்கள் இதோ: "37 ஆண்டுகளுக்கு முன்பு நானும் உங்களைப் போல வெறும் கையுடன் அமெரிக்கா சென்றவன் தான். நமக்குக் கல்வி மற்றும் வளர்ச்சியை வழங்கிய அமெரிக்காவிற்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்." "தற்போது அமெரிக்காவில் கணிசமானோர், இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதாக நம்பத் தொடங்கியுள்ளனர். அங்குள்ள 'தீவிர வலதுசாரிகள்' நமது நாகரீகத்தை வெறுக்கிறார்கள்; 'இடதுசாரிகள்' நம்மைப் பரிதாபமாகப் பார்க்கிறார்கள். நீங்கள் இந்த மோதல்களுக்கு இடையே சிக்கியிருக்கும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே." "ஒரு இந்தியருக்கு உலகளவில் கிடைக்கும் மரியாதை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பொருளாதார பலத்தையும் பொறுத்தே அமையும். தயவுசெய்து தாயகம் திரும்புங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை."
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Open letter to Indians in America.
— Sridhar Vembu (@svembu) April 27, 2026
--
Dear brothers and sisters from Bharat:
Like I did 37 years ago, you arrived in America with no money but with a good education and cultural heritage from Bharat. You achieved outstanding success. America was good to us. For that we must…
நரகக் குழி
டிரம்பின் 'நரகக் குழி' (Hellhole) விமர்சனத்தின் பின்னணி
இந்தக் கடிதம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில் இந்தியா மற்றும் சீனாவை "நரகக் குழிகள்" என்றும், அங்கிருந்து வருபவர்களை "லேப்டாப் வைத்திருக்கும் கேங்க்ஸ்டர்கள்" என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இந்தக் கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை" என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சாடியுள்ளார்.