61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவாட்டத்தை எதிர்கொண்டது இலங்கை
இலங்கையின் நுகர்வோர் விலைகள் நவம்பரில் 2.1 சதவீதம் சரிந்துள்ளன. இது 1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார ரீதியாக பலவீனமான இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பணவாட்ட வீதமாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 இல் முன்னெப்போதும் இல்லாத நிதிச் சரிவு பல மாதங்களாக நுகர்வோர் பொருட்களின் பற்றாக்குறையைக் கொண்டு வந்தது. இது அந்த ஆண்டில் பணவீக்கத்தை கிட்டத்தட்ட 70 சதவீதமாக உயர்த்தியது. அப்போதிருந்து, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து $2.9 பில்லியன் பிணை எடுப்பு கடன், வரி உயர்வு மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்வதில் மெதுவாக முன்னேறின.
பணவீக்கம் ஐந்து சதவீதத்திற்கு திரும்பும் என இலங்கை ரிசர்வ் வங்கி நம்பிக்கை
வரும் மாதங்களில் பணவீக்கம் அதன் இலக்கு அளவான ஐந்து சதவீதத்திற்கு திரும்பும் என்று இலங்கையின் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இலங்கை ஏற்கனவே அக்டோபரில் 0.8 சதவீதமாகவும், செப்டம்பரில் 0.5 சதவீதமாகவும் பணவாட்டத்தை கண்டிருந்தது. இதற்கிடையே, கடந்த செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனக்கு முந்தைய அரசாங்கத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தைப் பேணுவதாக உறுதியளித்தார். முன்னர், சர்வதேச நாணய நிதியத்துடன் இதுகுறித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளதாக, அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது இதில் அதிக வரிகள் மற்றும் அரச செலவினங்களில் வெட்டுக்கள் அடங்கும்.