Page Loader
சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்: அறிக்கை
சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்

சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்: அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2024
11:18 am

செய்தி முன்னோட்டம்

சோனி குரூப் கார்ப்பரேஷன், அதன் இந்திய யூனிட்டுடன் Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணைப்பை ரத்து செய்வதற்கான முடிவை முறையாகத் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஜப்பானிய பொழுதுபோக்கு நிறுவனமான சோனி, திங்கள்கிழமை அதிகாலை Zee நிறுவனத்திற்கான ஒப்பந்த நீக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளது. ஸீ உடனான இணைப்பை நிறுத்துவதற்கு, சோனி விதித்த சில முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படவில்லை என மேற்கோள் காட்டியது அந்த அறிக்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இணைப்பு, ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைமைத்துவம் உட்பட சவால்களை எதிர்கொண்டது. உடன், Zee CEO புனித் கோயங்கா மீதான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணையால் அது மேலும் வலுவிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post