
இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்பின் தலைநகரான சிலிக்கான வேலியில் இரு இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்.
இந்திய வம்சாவளி இளைஞர்களான ஆர்யன் ஷர்மா மற்றும் ஆயுஷ் பதக் ஆகிய இருவரும் சிலிக்கான் வேலியில் 'இன்டியூஸ்டு AI' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப்பிற்காக முதற் நிலை நிதிதிரட்டலின் கீழ் 2.3 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் (இந்திய மதிப்பில் 19.14 கோடி ரூபாய்) திரட்டியிருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.
முதல் நிலை நிதி திரட்டலின் கீழ், சாம் ஆல்ட்மேன், முதலீட்டு நிறுவனமான பீக் XV மற்றும் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியிருக்கிறார்கள் இவர்கள்.
செயற்கை நுண்ணறிவு
'இன்டியூஸ்டு AI' ஸ்டார்ட்அப்பின் நோக்கம் என்ன?
உலாவிகளில் தானியங்கி செயல்முறையை செயல்படுத்துவதற்கா மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களை உருவாக்கும் வசகியை அளிப்பதே தங்களுடைய ஸ்டார்ட்அப்பின் திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் ஆர்யன் ஷர்மாவும், ஆயுஷ் பதக்கும்.
நாம் தினசரி பயன்படுக்கும் உலாவிகளில் பயன்படுத்தும் வகையிலான செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்காமல், இதனை மையப்படுத்தி பிரத்தியேக உலாவியை கட்டமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் அவர்கள்.
இந்த இன்டியூஸ் AI-யானது AI கிராண்ட்ஸூடைய இரண்டாம் பேட்சின் ஒரு பகுதியாகும். தங்களுடன் கிட்ஹப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான நேட் பிரைட்மேனும், மற்றொரு தொழில்நுட்ப முன்னோடியான டேனியல் கிராஸூம் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் அந்த இந்திய வம்சாவளி இளைஞர்கள்.