NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
    வணிகம்

    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 03, 2023 | 05:26 pm 0 நிமிட வாசிப்பு
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 21ம் தேதியன்று தடை விதித்து அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளை அரிசியின் ஏற்றுமதி அதிரடியாக நிறுத்தப்பட்டது. அரிசி ஏற்றுமதியின் மீது இந்திய அரசு தடை விதித்து ஆறு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், உலகில் அரிசியை பிரதானமாக எடுத்தும் கொள்ளும் மற்றும் அரிசியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் அரிசியின் விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைச் சந்தித்திருக்கிறது. பாஸ்மதி அல்லாத வெள்ளி அரிசியை, பிற அரிசியின் பெயர்களில் சட்டத்திற்குப் புறம்பாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க, புழுங்கல் அரிசி மற்றும் பாஸ்மதி அரிசியின் மீது 20% ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது.

    உலக நாடுகளின் நடவடிக்கை: 

    பிற அரிசி வகைகள் மீதான கூடுதல் ஏற்றுமதி வரியானது, மற்ற நாடுகளில் அரிசி விலையில் மேலும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கிறது. ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அரிசி விளைச்சல் குறைந்திருக்கும் நிலையில், எல் நினோவால் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் மேலும் கூடுதலான வறட்சி நிலவும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வரும் மாதங்களில் ஆசிய நாடுகளில் அரிசியின் விளைச்சல் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி ஏற்றுமதி மீது தடை விதித்திருப்பதைக் கடந்து இன்னும் டெல்லியின் அரிசியின் விலை குறையவில்லை. ஆனால், அதன் விலை உயராமல் அதே ரூ.39ல் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வாய்ப்பைப் பயன்படுத்தும் தாய்லாந்து: 

    விளைச்சல் குறைவாக இருப்பதைக் கடந்து, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதும் இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் சமயத்தில் முக்கிய உணவின் விலை உயர்வை மக்கள் சாதாரணமாக எடுத்தக் கொள்ள மாட்டர்கள். மேலும், அது தேர்தலிலும் எதிரொளிக்கும் என்பதனாலேயே அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவைத் தொடர்ந்து, உலகின் இரண்டாவது முன்னணி அரிசி ஏற்றுமதியாளரான தாய்லாந்து பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. தாய்லாந்து அதிகாரிகள், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் ஜப்பான ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி குறித்து உரையாடுவதற்காக பயணம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கு கோரும் நாடுகள்: 

    உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வியட்நாமும், சாதாரணமாகத் தாங்கள் ஏற்றுமதி செய்வதை விட சற்றுக் கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தங்கள் நாட்டு அரிசித் தேவை பாதிக்கப்படாமல், எவ்வளவு கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்ய முடியுமோ, அந்தளவிற்குக் கூடுதலான அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது வியட்நாம். இதற்கிடையில் அரிசி ஏற்றுமதித் தடையிலிருந்து தங்கள் நாட்டிற்கு விலக்கு அளிக்கும்படி, சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து, அந்நாடுகளுக்கு விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதி குறித்து உரையாட கினியா நாட்டின் வர்த்தக அமைச்சர் இந்தியாவிற்கு பயணமும் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பூட்டானுக்கு விலக்கு அளித்திருக்கும் இந்தியா:

    India 🇮🇳 decides to export rice, despite ban, to its friend Bhutan.

    79,000 tonnes of non-basmati rice will be supplied to Bhutan 🇧🇹.

    Mauritius 🇲🇺 too gets exempted. 14,000 tonnes will reach the island nation. pic.twitter.com/wxeMZVjoN6

    — Karthik Reddy (@bykarthikreddy) August 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வணிகம்
    இந்தியா
    உலகம்

    வணிகம்

    கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்  இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 2 தங்கம் வெள்ளி விலை
    அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அமைச்சரவை
    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி பிரதமர் மோடி
    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  அமலாக்க இயக்குநரகம்
    இந்தியாவில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா

    உலகம்

    அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்  வட கொரியா
    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா
    இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா  கனடா
    சிங்கப்பூரின் அதிபர் ஆன தமிழர்: யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023