Page Loader
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது
சில்லறை பணவீக்கம்

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 12, 2024
06:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை 2024இல் 3.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை பணவீக்கமான 4 சதவீதத்திற்கு கீழே குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்குக் கீழே கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இப்போதுதான் குறைந்துள்ளது என மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக செப்டம்பர் 2019இல் தான் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இதற்கிடையே, சில்லறை பணவீக்கம் ஜூன் 2024இல் 5.08 சதவீதமாகவும், ஜூலை 2023இல் 7.44 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பணவீக்கம்

5.42 சதவீதமாக குறைந்த உணவு பணவீக்கம்

இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ள நிலையில், உணவுக் கூடை பணவீக்கமும் ஜூலை 2024இல் 5.42 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது. உணவுக் கூடை பணவீக்கம் முந்தைய 2024 ஜூன் மாதத்தில் 9.36 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தைப் பொருத்தரவை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 4 சதவீதத்தை நிர்ணயித்துள்ளதோடு, 4இல் இருந்து 2 குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம் என்ற நெகிழ்வையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.