
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்: ரிசர்வ் வங்கி
செய்தி முன்னோட்டம்
இன்று ஜனவரி 8ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
இந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி 2024 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணிப்பை மாற்றாமல் 7 சதவீதமாக வைத்துள்ளது. அதோடு 2023-24ஆம் ஆண்டிற்கான பணவீக்க மதிப்பீட்டையும் மாற்றாமல் 5.4 சதவீதமாக வைத்திருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ரெப்போ வட்டி விகிதம்
#JUSTIN | வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
— Sun News (@sunnewstamil) February 8, 2024
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.#SunNews | #Repo | #RBI