Loading...
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஆஃபர்: ₹15-க்கு 24 மணி நேர வரம்பற்ற 5G டேட்டா பேக் அறிமுகம்
₹15-க்கு 24 மணி நேர வரம்பற்ற 5G டேட்டா பேக்கை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஆஃபர்: ₹15-க்கு 24 மணி நேர வரம்பற்ற 5G டேட்டா பேக் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2026
12:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது True 5G பயனர்களுக்காக ₹15 விலையில் புதிய வரம்பற்ற 5G டேட்டா பூஸ்டர் பேக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் குறுகிய காலத்திற்கு அதிக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், வழக்கமான டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் போல் குறிப்பிட்ட GB வரம்பு எதுவும் இன்றி, 24 மணி நேரத்திற்கும் முழுமையான வரம்பற்ற 5G டேட்டாவைப் பயன்படுத்தலாம். ரீசார்ஜ் செய்த நேரத்திலிருந்து சரியாக 24 மணி நேரம் இத்திட்டம் செயல்படும்.

அம்சங்கள்

₹15 டேட்டா பேக்கின் முக்கிய அம்சங்கள்

4K வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், பெரிய அளவிலான சாஃப்ட்வேர்/வீடியோ ஃபைல்கள் பதிவிறக்கம் மற்றும் வொர்க் ஃபிரம் ஹோம் பணிகளுக்கு இது பெரிதும் உதவும்.

இச்சலுகையைப் பெற பயனர் 5G வசதியுள்ள ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும்; பயனர் இருக்கும் பகுதி Jio True 5G நெட்வொர்க் எல்லைக்குள் இருக்க வேண்டும்; மொபைலில் செயலில் உள்ள அடிப்படை ரீசார்ஜ் பிளான் இருக்க வேண்டும்.

இப்புதிய ₹15 ரீசார்ஜ் பேக் இந்தியாவின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் உடனடியாகக் கிடைக்கிறது.

ADVERTISEMENT