LOADING...
ஒன்பிளஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த CEO
ஒன்பிளஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா?

ஒன்பிளஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த CEO

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் சேவைகளை நிறுத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஒன்பிளஸ் 15 மற்றும் 15R போன்ற புதிய மாடல்களை வாங்கியவர்கள் இதனால் கவலை அடைந்தனர். இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் CEO ராபின் லியு, தனது 'X' (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஒன்பிளஸ் இந்தியா மூடல் குறித்து பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை. இவை வெறும் வதந்திகள் மட்டுமே. எங்களின் செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும். ஒன்பிளஸ் எப்போதும் தனது 'Never Settle' என்ற கொள்கையுடன் செயல்படும்," என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வதந்தி

வதந்திகள் கிளம்பியது ஏன்?

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் என்ற இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வு கட்டுரையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் விற்பனை உலகளவில் 20% சரிந்துள்ளதாகவும், அதன் தாய் நிறுவனமான ஒப்போ (Oppo), ஒன்பிளஸை முழுமையாக தனது பிராண்டிற்குள் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்தியாவில் பல ரீடைல் கடைகள் ஒன்பிளஸ் போன்களை விற்பதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்தியா ஒன்பிளஸின் மிக முக்கியமான சந்தை என்றும், இங்கு சேவைகளை நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஒன்பிளஸ் போன் வைத்திருப்பவர்கள் அதன் வாரண்டி மற்றும் மென்பொருள் அப்டேட்கள் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement