LOADING...
500 ரூபாய்க்கு இனி சில்லறை தேட வேண்டாம்; 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை தரும் புதிய 'ஹைப்ரிட்' ATMகள்
குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது

500 ரூபாய்க்கு இனி சில்லறை தேட வேண்டாம்; 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை தரும் புதிய 'ஹைப்ரிட்' ATMகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
01:02 pm

செய்தி முன்னோட்டம்

யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள போதிலும், அன்றாடத் தேவைகளுக்கான சில்லறைத் தட்டுப்பாடு இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது. இதனை சரிசெய்யும் வகையில், 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தாண்டி, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனை (Pilot Project) தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வெற்றியடைந்தால், நாடு முழுவதும் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

ஹைப்ரிட் ஏடிஎம்

ஏன் இந்த ஹைப்ரிட் ATM மாற்றம்?

'ஹைப்ரிட் ATM' இயந்திரங்கள் பெரிய மதிப்புள்ள நோட்டுகளை (உதாரணமாக 500 ரூபாய்) பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக சிறிய மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் சில்லறைகளை வழங்கும் திறன் கொண்டவை. 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் சிறு வியாபாரிகள் படும் அவதிக்கு இது தீர்வாக அமையும். 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் சிறு வியாபாரிகள் படும் அவதிக்கு இது தீர்வாக அமையும். கிராமப்புறங்கள் மற்றும் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் இன்னும் பண பரிவர்த்தனைகளே பிரதானமாக உள்ளன. ஸ்மார்ட்போன் இல்லாத சாமானிய மக்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் சிறிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பது எளிதாக்கப்படும். RBI அதிக அளவில் சிறிய நோட்டுகளை அச்சிடவும், வங்கிகள் அதன் விநியோகத்தை முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement