LOADING...
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி சீரமைப்பு!
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்

Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி சீரமைப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
02:59 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை சீராக்கி, விற்பனை வளர்ச்சியை இலக்காக கொண்டு, புதிய தலைமைச் செயல் அதிகாரி பிலிப் நவரத்தில் (Philipp Navratil) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். மொத்தமாக 16,000 பணி நீக்கங்களில்,12,000 White-collar பதவிகள் அடங்கும். இந்த பணி நீக்கங்கள் மூலம் நிறுவனம் ஒரு பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸை சேமிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், 2027 இறுதிக்குள் மொத்த சேமிப்பு இலக்கை 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸில் இருந்து 3 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸாக உயர்த்தியுள்ளது.

அறிக்கை

புதிய CEO-வின் அதிரடி நடவடிக்கை

"உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நெஸ்லே அதைவிட வேகமாக மாற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான இந்த 'கடினமான ஆனால் அவசியமான முடிவுகள்' எடுக்கப்பட்டுள்ளன," என்று நவரத்தில் தெரிவித்தார். செப்டம்பரில் பொறுப்பேற்ற நவரத்தில், சமீபத்திய நிர்வாக மாற்றங்கள், பாட்டில் நீர் மோசடி போன்ற சவால்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.9% விற்பனை சரிவு (₹65.9 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸ்) ஆகியவற்றின் மத்தியில் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார். செலவுகளைக் குறைப்பதன் மூலமும், அதிக லாபம் தரக்கூடிய பிரிவுகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலமும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நவரத்தில் முயற்சி செய்து வருகிறார்.