Page Loader
3,600 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாரா மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க்? என்ன காரணம்
3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது Meta

3,600 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாரா மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க்? என்ன காரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 15, 2025
09:47 am

செய்தி முன்னோட்டம்

மெட்டா அதன் சமீபத்திய செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்கங்களின் ஒரு பகுதியாக சுமார் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க்கின் உள் குறிப்பில் பகிரப்பட்ட இந்த முடிவு, முன்பை விட விரைவாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை வெளியேற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அந்த குறிப்பில், மார்க், "செயல்திறன் நிர்வாகத்தில் தரத்தை உயர்த்தவும், குறைந்த செயல்திறன் கொண்டவர்களை விரைவாக வெளியேற்றவும் நான் முடிவு செய்துள்ளேன். ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம், ஆனால் இப்போது இந்த சுழற்சியின் போது அதிக செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்கங்களை நாங்கள் செய்ய உள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு

Performace Review பொறுத்து பணிநீக்க முடிவு

மெமோவின் படி, திட்டமிடப்பட்ட ஆட்குறைப்பு, தற்போதைய performance reviewவின் முடிவில் 10% பணி நீக்கங்களை ஏற்கனவே அறிவித்த மெட்டாவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் 2024ல் இருந்து மட்டும் சுமார் 5% அடங்கும். ஜுக்கர்பெர்க்கின் "திறனுக்கான ஆண்டு" முன்முயற்சியின் கீழ் Meta அதன் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து மறுகட்டமைத்து வருவதால், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது செலவுகளை மேம்படுத்தவும் நிறுவனத்தை நெறிப்படுத்தவும் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டில், மெட்டா ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, குழு மறுசீரமைப்பு மற்றும் லாபத்தை அதிகரிக்க செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. பணிநீக்கங்கள் மெட்டாவில் பல மூலோபாய மற்றும் கொள்கை மாற்றங்களுடன் ஒத்துப்போகின்றன, அவற்றில் சில உள் மற்றும் வெளிப்புற விவாதங்களைத் தூண்டியுள்ளன.