LOADING...
அதிகாலை 4 மணிக்கு வந்த 'பகீர்' மெயில்! மெட்டாவில் 8,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்
மெட்டாவின் இந்த அதிரடி நடவடிக்கை தொழில்நுட்பத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதிகாலை 4 மணிக்கு வந்த 'பகீர்' மெயில்! மெட்டாவில் 8,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்த அதிரடி நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெயில்

அதிகாலை 4 மணிக்கு வந்த பணிநீக்க மெயில்கள்

மெட்டா நிறுவனத்தின் இந்த வேலைநீக்க அறிவிப்பு, அந்தந்த நாடுகளின் நேர மண்டலங்களுக்கு ஏற்ப தனித்தனி அலைகளாக அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர் பிராந்தியத்தில் உள்ள ஊழியர்களுக்கு உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:00 மணிக்கே (இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணி) பணிநீக்க மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான நாளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு (Work From Home) நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடமாற்றம்

7,000 ஊழியர்களுக்கு AI பிரிவில் கட்டாய இடமாற்றம்

மெட்டாவின் மனிதவள அதிகாரி ஜானெல்லே கேல் வெளியிட்டுள்ள உள்நாட்டுக் குறிப்பின்படி, 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது மட்டுமின்றி, மேலும் 7,000 ஊழியர்கள் புதிய AI சார்ந்த குழுக்களுக்குக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். நிறுவனத்தை விரைவாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் இயக்க சிறிய குழுக்களாக (Pods/Cohorts) மாற்றிமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல மேலாளர் பதவிகள் முற்றிலுமாகக் குறைக்கப்படவுள்ளன. நிறுவனத்தின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏற்கனவே காலியாக இருந்த 6,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

ட்ராக்கிங்

மவுஸ் ட்ராக்கிங் மென்பொருளும் ஊழியர்களின் கொந்தளிப்பும்

மெட்டா நிறுவனம் தனது ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஊழியர்களின் மவுஸ் அசைவுகள் மற்றும் கீபோர்டு அழுத்தங்களைக் கண்காணிக்கும் புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த வேலைநீக்க அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஊழியர்களின் மன உறுதி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த ஆண்டு மட்டும் AI துறையில் 125 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதே இந்த ஆட்குறைப்புக்கு முக்கியக் காரணமாகும்.

Advertisement