
தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்த நிலையில் இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வங்கிக் கடன் வளர்ச்சி பிப்ரவரியில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்தநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கடுமையான விதிமுறைகள் கடன் வழங்கலைப் பாதித்தன.
ஆர்பிஐ தரவுகளின்படி, கடன் வளர்ச்சி கடந்த ஆண்டின் பிப்ரவரி காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 12% ஆகக் குறைந்தது.
இது பிப்ரவரி 2024 இல் 16.6% ஆக இருந்தது. இது எச்டிஎப்சி வங்கியை வீட்டுவசதி மேம்பாட்டு நிதி நிறுவனத்துடன் இணைப்பதன் தாக்கத்தைத் தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பைக் கணக்கிடும்போது, கடன் வளர்ச்சி 11% ஆக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 20.5% ஆக இருந்தது.
ஆர்பிஐ
ஆர்பிஐ புதிய விதிகளால் பின்னடைவு
வாடிக்கையாளர் கடன்கள், கிரெடிட் கார்டு கடன் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) கடன் வழங்குவதற்கான மூலதனத் தேவைகளை கடுமையாக்குவதற்கு ஆர்பிஐ 2023 இன் பிற்பகுதியில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது மோசமான கடன்கள் குறித்த கவலைகளை காரணம் காட்டி ஆர்பிஐ விதிகளை கடுமையாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, வங்கிகள் தங்கள் கடன்-வைப்பு விகிதங்களை பராமரிக்க கடனை குறைத்தன.
இது கடன் வளர்ச்சியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதத்தில் தனிநபர் கடன் வளர்ச்சி 19.5% இலிருந்து 8.4% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் கிரெடிட் கார்டு கடன் விரிவாக்கம் 31% இலிருந்து 11.2% ஆகக் குறைந்துள்ளது.