
யார் இந்த கேஷுப் மஹிந்திரா? தெரிந்துகொள்ள வேண்டியவை:
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் மாமா கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமாகியுள்ளார்.
உலக பணக்கார பட்டியலில் 16 கோடீஸ்வரர்களில் இவரும் இடம்பிடித்திருந்தார்.
அந்தப் பட்டியலில் கேஷுப் மஹிந்திராவின் சொத்து மதிப்பு மட்டுமே 1.2 மில்லியன் டாலர்கள் ஆகும்.
யார் இந்த கேஷுப் மஹிந்திரா?
அமெரிக்காவின் வார்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேஷுப் மஹிந்திரா 1947 ஆம் ஆண்டில் மஹிந்திரா குழுமத்தில் இணைந்தார்.
பின் 1963 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தார். அதன்பின் ஆனந்த மஹிந்திராவிடடம் நிறுவனத்தை ஒப்படைத்தார்.
கேஷுப் மஹிந்திரா
மஹிந்திராவின் முன்னாள் தலைவருமான கேஷுப் மஹிந்திராவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
இவரின் தொழில்துறை பங்களிப்பை பாராட்டி 1987 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசு விருது வழங்கி கெளரவப்படுத்தி இருந்தது.
மேலும், கேஷுப் மஹிந்திரா டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்திய ஹோட்டல்கள் மற்றும் IFC, ICICI உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒரு பகுதியாக பணியாற்றியவர்.
இதுமட்டுமின்றி இவர், நிறுவனச் சட்டம் மத்திய தொழில்துறை ஆலோசனைக்குழுவில் பணியாற்ற அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்.
2004 ஆண்டில் இருந்து 2010 ஆண்டு வரை டெல்லி வர்த்தகம் தொழில்துறையின் பிரதம மந்திரி கவுன்சிலில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் மறைவுக்கு பவன் கோயங்கா ட்விட்டில், தொழில்துறை உலகம் இன்று மிக உயரமான ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. ரீ கேஷூப் மஹிந்திராவுக்கு இணை இல்லை. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.