
மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த நான்கு மாநில தேர்தல் பார்க்கப்பட்டது.
இந்தத் தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருப்பது, மக்களவைத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிக்கே ஆதரவான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
பங்குச்சந்தை
ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்:
பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டிருக்கின்றன. மேலும், இந்திய பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் (1.45%) வரை உயர்ந்து 68,461 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 300 புள்ளிகள் (1.44%) வரை உயர்ந்து 20,562 புள்ளிகள் என்ற புதிய புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
நேற்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இன்று மிசோரம் மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
எக்ஸ் பயனரின் பதிவு:
#nifty50 and #sensex going boom boom after yesterdays BJPs spectacular win..💥🚀💥🔥💥 pic.twitter.com/jqNwDamquq
— 🇮🇳sanjay (@puffin_pipe) December 4, 2023