LOADING...
ரயில் பயணிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி: டிசம்பர் 26 முதல் கூடுதல் கட்டணம்! 
வரும் டிசம்பர் 26, 2025 முதல் புதிய கட்டண முறை நடைமுறைக்கு வருகிறது

ரயில் பயணிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி: டிசம்பர் 26 முதல் கூடுதல் கட்டணம்! 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2025
01:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பயண கட்டணத்தை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 26, 2025 முதல் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி பெட்டிகளுக்கான புதிய கட்டண முறை நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு இது பொருந்துமா அல்லது இனி வரும் முன்பதிவுகளுக்கு மட்டுமா என்பது குறித்த விரிவான விளக்கத்தை ரயில்வே விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம்

விலையேற்றத்திற்கான காரணம் 

ரயில்வே துறையின் செயல்பாட்டுச் செலவுகள் (Operating Costs) அதிகரித்துள்ளதாலும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த நிதி தேவைப்படுவதாலும் இந்தச் சிறிய அளவிலான கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, ரயில்களில் வழங்கப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் நவீனப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இந்தத் தொகை பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூலம் நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ. 600 கோடி வருவாய் கிடைக்கும் என ரயில்வே எதிர்பார்க்கிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உயர்வு

யாருக்கு எவ்வளவு உயர்வு

1. ஏசி மற்றும் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள்: குளிர்சாதன வசதி கொண்ட அனைத்து பெட்டிகள் (AC Class) மற்றும் ஏசி அல்லாத மெயில்/எக்ஸ்பிரஸ் பெட்டிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2. சாதாரண வகுப்புகள்: 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசா கட்டணம் உயரும். உதாரணமாக, ஏசி அல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணம் செய்யும் ஒரு பயணி கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் 215 கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் பயணம் செய்யும் சாதாரண வகுப்புப் பயணிகளுக்குக் கட்டண உயர்வு ஏதுமில்லை. புறநகர் ரயில்கள் (Suburban Trains) மற்றும் மாதந்திர சீசன் டிக்கெட்டுகளின் (Season Tickets) விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement