பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
2023 மற்றும் 2024 க்கு இடையில் சைலெண்டான பணிநீக்கங்களால் இந்தியாவின் IT துறை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்துள்ளதாக அகில இந்திய IT & ITeS ஊழியர் சங்கம் (AIITEU) தெரிவித்துள்ளது. AIITEU, உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும், ஆனால் அது பதிவாகவில்லை எனத்தெரிவிக்கிறது. இந்த மாதிரி பணிநீக்கங்கள் அனைத்து அளவிலான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களிலும் நிகழ்ந்துள்ளன.
அமைதியான பணிநீக்க நடைமுறைகள் மற்றும் 2024 இல் அவற்றின் தாக்கம்
இதன்படி, ஒரு தொழிலாளிக்கு அதே நிறுவனத்தில் வேறு ஒரு புதிய பதவியையோ, வேலையையோ பெறுவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கபடும். ஒரு வேளை, எதிர்பார்த்த வேளை கிடைக்கவில்லையென்றால், பணியாளர் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். Nascent Information Technology Employees Senate (NITES) படி, 2024ல் மட்டும், 2,000-3,000 பணியாளர்கள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் வேலை இழந்துள்ளனர்.
சைலன்ட் பணிநீக்கங்களை செயல்படுத்தும் முக்கிய நிறுவனங்கள்
கிளவுட் அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா பிளாட்ஃபார்ம் நிறுவனமான அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெராடேட்டா, அதன் ஹைதராபாத் வளாகத்தில் இருந்து சுமார் 35-40 ஊழியர்களை 2023 இறுதியில் நீக்கியது. இது 2022இல் சுமார் 1,100 ஊழியர்களின் உலகளாவிய பணிநீக்கத்தைத் தொடர்ந்து வந்தது. பாஸ்டனை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான ஸ்டேட் ஸ்ட்ரீட், கடந்த ஆண்டு Atos Syntelஇன் செயல்பாடுகளை தன்னகத்தே வாங்கியபின்னர், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 400-500 ஊழியர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் தொடர்கின்றன
Accenture , Infosys , மற்றும் Cognizant முழுவதும் இதே போன்ற பணிநீக்கங்கள் நடைபெறுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2024 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ் கிட்டத்தட்ட 200-500 ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இன்ஃபோசிஸ் மற்றும் அடோஸ் குழுமங்கள் இரண்டும் இந்த ஆட்குறைப்பு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. 2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிந்தைய மிக உயர்ந்த பணிநீக்க ஆண்டுகளில் ஒன்றாக இந்த காலகட்டத்தை தொழில் வல்லுநர்கள் முத்திரை குத்தியுள்ளனர்.