NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து
    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரி குறைப்பு

    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,600லிருந்து ரூ.2,100 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அமலுக்கு வந்துள்ளது.

    முன்னதாக, ஜூலை 31ஆம் தேதி கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரி 34.2 சதவீதம் குறைக்கப்பட்டு டன்னுக்கு ரூ.4,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, தற்போது டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதிக்கு விண்ட்ஃபால் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா முதலில் ஜூலை 2022இல் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது விண்ட்ஃபால் வரியை விதிக்கத் தொடங்கியது. பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது.

    விண்ட்ஃபால் வரி

    சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் விண்ட்ஃபால் வரி

    விண்ட்ஃபால் வரி என்பது தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் உள்நாட்டில் விற்பனை செய்வதை விட சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கவே கொண்டுவரப்பட்டது.

    சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.

    எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, ஒரு தொழில் வழக்கத்திற்கு மாறாக அதிக லாபத்தை அனுபவிக்கும் போது, ​​அரசாங்கங்களால் விண்ட்ஃபால் வரிகள் விதிக்கப்படுகின்றன.

    குறிப்பாக, ரஷ்யா-உக்ரைன் போரால் தேவை அதிகரிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபங்களை பெற்றதை அடுத்து இந்தியா விண்ட்ஃபால் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    வணிக செய்தி
    வணிகம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    மத்திய அரசு

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்  பாஜக
    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்? இந்தியா
    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு  இந்தியா
    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?  இந்தியா

    இந்தியா

    ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆர்பிஐ
    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன பங்களாதேஷ்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு ரிசர்வ் வங்கி
    மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    வணிக செய்தி

    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!  பங்குச் சந்தை
    பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ்  பங்குச் சந்தை
    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 20 தங்கம் வெள்ளி விலை
    50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ் பெங்களூர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 21 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 22 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025