Page Loader
நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்
நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்

நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 26, 2023
11:17 am

செய்தி முன்னோட்டம்

விமான சேவைகள் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் இணையதள பயண சேவை ஒருங்கிணைப்புத் தளங்கள் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து புகார் எழுப்பியிருக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம். முறையாக பயணச்சீட்டு பெற்ற பயணிகளை விமானத்தில் அனுமதிக்காமல் இருப்பது, ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பியளிப்பதில் காலம் தாழ்த்துவது உள்ளிட்ட நுகர்வோருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் விமான சேவைகள் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான இணையதள இடமுகப் பக்கங்களில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வாடிக்கையாளர்களின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் 'டார்க் பேட்டர்ன்'களையும் விமான சேவை நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார்.

வணிகம்

விமான சேவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை? 

இது போன்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபவடுவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றாமகும். எனினும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் விமான சேவைகள் ஈடுபட்டு வருவதும், இது குறித்து வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரிப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் 10,000 வாடிக்கையாளர்கள் விமான சேவை நிறுவனங்கள் குறித்து புகாரளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம். இதனைத் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் ரோகித் குமார். இந்த சந்திப்பில் மேற்கூறிய நுகர்வோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.