LOADING...
இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி ரத்து
இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
01:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95% பொருட்களுக்கான சுங்க வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது அல்லது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி ஆண்டுக்கு 1.1 பில்லியன் டாலரிலிருந்து 1.3 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்து தொலைபேசியில் உரையாடித் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

வர்த்தக ஒப்பந்த விவரங்கள் 

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் (IT), மென்பொருள் சேவைகள், மருந்துகள் (Pharmaceuticals), ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு நியூசிலாந்து சந்தையில் பெரும் வாய்ப்புகள் உருவாகும். நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான மரக்கட்டைகள், காகிதக் கூழ், கம்பளி, ஆப்பிள் மற்றும் கிவி பழங்கள் வரிக்குறைப்பு பலன்களை பெறும். வர்த்தகம் மட்டுமின்றி, இந்திய மாணவர்கள் நியூசிலாந்தில் உயர்கல்வி கற்பது மற்றும் சுற்றுலாத் துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பு நிலவும். உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்துடன் நியூசிலாந்து இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது, இரு நாட்டு வர்த்தகர்களுக்கும் 140 கோடி நுகர்வோரை அணுகும் வாய்ப்பை வழங்கும் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

Advertisement