இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய FTA ஜனவரி 27 அன்று கையெழுத்தாகிறது
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் ஜனவரி 27 அன்று கையெழுத்திடப்படலாம் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த FTA ஒப்பந்தம் மூலம், இரு தரப்பிற்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு உறவுகள் வலுப்பெறும். குறிப்பாக, இந்திய தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய சந்தையில் தடையில்லாத அணுகல் கிடைக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் என வணிக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினம்
குடியரசு தினத்தில் கௌரவம்
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒருபுறம் அமெரிக்கா தலைமையிலான தொழில்துறை தேசியவாதம், மறுபுறம் சீனாவின் அரசு தலைமையிலான வணிகவாதம் என பிரிந்துள்ள உலக பொருளாதாரத்திற்கு இடையே இந்த EU FTA புதிய பாதையை உருவாக்கும் என நம்பப்படுகிறது. மேலும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக, ஐரோப்பிய ஒன்றிய குழுமத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். இந்த வருகை, இருதரப்பு உறவுகளின் ஆழத்தையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.