LOADING...
இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்படித் தொடங்கியது? 166 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட அடித்தளம்
இந்திய பட்ஜெட்டின் வரலாறு

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்படித் தொடங்கியது? 166 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட அடித்தளம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2026
06:06 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளையில், இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்போது தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஏப்ரல் 7, 1860 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் தி எகனாமிஸ்ட் இதழின் நிறுவனர் மற்றும் இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்தவர்.

பின்னணி

பட்ஜெட்டின் பின்னணி

1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசின் நிதிநிலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதைச் சீரமைக்க விக்டோரியா மகாராணி ஜேம்ஸ் வில்சனை இந்தியாவிற்கு அனுப்பினார். ஜேம்ஸ் வில்சன் தான் இந்தியாவில் முதன்முதலில் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தினார். இது இன்றும் இந்திய அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. அந்த காலத்திலேயே, ஆண்டுக்கு ரூ.200 க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்ற முறையை அவர் கொண்டு வந்தார்.

சுதந்திரம்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

ஆங்கிலேயர் ஆட்சியில் பட்ஜெட் முறை தொடங்கினாலும், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.கே. சண்முகம் செட்டி இதை தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான இவர், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதையும், நாட்டின் மறுகட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Advertisement

பட்ஜெட்

பட்ஜெட் தாக்கல் செய்த முக்கிய முகங்கள்

சுதந்திரத்திற்குப் பிறகு பி.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஜெட்லி போன்ற பல நிதி அமைச்சர்கள் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு அவர் தனது 9வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். பிரிட்டிஷ் காலத்தில் காகித வடிவில் தொடங்கிய பட்ஜெட், இன்று நிர்மலா சீதாராமன் அவர்களின் காலத்தில் டிஜிட்டல் பட்ஜெட் ஆக உருவெடுத்துள்ளது.

Advertisement