
இவ்ளோ குறைவா! வாரத்தின் முதல்நாளே நகைப் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்க விலை
செய்தி முன்னோட்டம்
இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.
மேலும் இது நகை வாங்குபவர்களிடையே சற்று நிம்மதியை அளித்துள்ளது. முன்னதாக ஒரு கிராமுக்கு ரூ.9,000 ஐத் தாண்டி ரூ.10,000 ஐ நெருங்கி வந்த தங்கத்தின் விலை, இப்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
ஏப்ரல் 24, 2025 அன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.9,005 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.72,040 ஆகவும் விற்பனையானது.
தொடர்ந்து நான்கு நாட்கள் நிலைத்தன்மையுடன் இருந்ததைத் தொடர்ந்து, இன்றைய விலைகள் கூர்மையான சரிவைக் கண்டன.
சவரன்
ஒரு சவரன் தங்க விலை
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.8,940 ஆகவும், சவரனுக்கு ரூ.71,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.7,405 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.59,240 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 என்ற சிறிய குறைவை பதிவு செய்துள்ளது, ஒரு கிராம் இப்போது ரூ.111 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,11,000 ஆகவும் உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சரிவு, குறிப்பாக திருமண சீசன்கள் மற்றும் பண்டிகைகள் நெருங்கி வருவதால், விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் வாங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.