சவரனுக்கு ₹1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹230 அதிகரித்து ₹13,660 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,09,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹251 அதிகரித்து ₹14,902 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,008 அதிகரித்து ₹1,19,216 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் அதிகரிப்பு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹200 அதிகரித்து ₹11,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,600 அதிகரித்து ₹91,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹250.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் கடந்த வாரம் தங்கம் விலை சரமாரியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பது முதலீடு செய்து வைத்தவர்களிடையே நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனினும், நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.