LOADING...
சற்றே ஆறுதல் தந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
தங்க விலை, செவ்வாய்கிழமை (ஏப்ரல் 28) சற்று இறங்கியுள்ளது

சற்றே ஆறுதல் தந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஏப்ரல் 28) சற்று இறங்கியுள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹65 குறைந்து ₹14,025 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹520 குறைந்து ₹1,12,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹71 குறைந்து ₹15,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹568 குறைந்து ₹1,22,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் குறைந்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹53 குறைந்து ₹11,475 ஆகவும், ஒரு சவரன் ₹424 குறைந்து ₹91,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement