LOADING...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 08, 2025
10:15 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (டிசம்பர் 8) எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. அதன்படி, திங்கட்கிழமை விலையில் எந்த மாற்றமும் இன்றி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹12,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹96,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,05,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் நிலையாக உள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹10,040 ஆகவும், ஒரு சவரன் ₹80,320 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹1 குறைந்து ₹198.00 ஆகவும், ஒரு கிலோ ₹1000 குறைந்து ₹1,98,000 ஆகவும் விற்பனை ஆகிறது. தற்போது ஆபரண விலைகள் சற்று நிலையாக இருந்தாலும், திருமண சீசன் மற்றும் டிசம்பர் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க வட்டி விகித மாற்றம் போன்ற காரணிகளால் மீண்டும் விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement