Loading...
விலை உயர்ந்தாலும் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

விலை உயர்ந்தாலும் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று மிகவும் குறைவான அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (அக்டோபர் 26), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹15 அதிகரித்து ₹13,085 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹120 அதிகரித்து ₹1,04,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹17 அதிகரித்து ₹14,275 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹136 அதிகரித்து ₹1,14,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹10,705 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80 அதிகரித்து ₹85,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹220.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,20,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT