மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (ஜூன் 9) தங்க விலை அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹130 அதிகரித்து ₹14,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,040 அதிகரித்து ₹1,13,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹142 அதிகரித்து ₹15,491 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,136 அதிகரித்து ₹1,23,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 அதிகரித்து ₹11,920 ஆகவும், ஒரு சவரன் ₹1000 அதிகரித்து ₹95,360 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹260 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சிறுசிறு தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது.