அடுத்த செய்திக் கட்டுரை

தங்கம் விலையில் திடீர் சரிவு: சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்தது
எழுதியவர்
Sindhuja SM
Jun 08, 2024
12:31 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.1520 குறைந்து ரூ.53,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,255ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,040ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ! #DialogueTamil #GoldRate #Chennai pic.twitter.com/GDlFGNd74D
— Dialogue Tamil (@DialogueUpdates) June 8, 2024
செய்தி இத்துடன் முடிவடைந்தது