Page Loader
ஆபரண தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது 

ஆபரண தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது 

எழுதியவர் Sindhuja SM
Jul 16, 2024
02:32 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.360 உயர்ந்து ரூ.54,640ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,451-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,608ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று, ரூ.99.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை