இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 21) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹350 அதிகரித்து ₹14,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,800 அதிகரித்து ₹1,14,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹382 அதிகரித்து ₹15,546 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,056 அதிகரித்து ₹1,24,368 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கடுமையாக உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹300 அதிகரித்து ₹11,890 ஆகவும், ஒரு சவரன் ₹2,400 அதிகரித்து ₹95,120 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் புதன்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹340.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் மற்றும் தொழில்துறையில் வெள்ளியின் தேவை உயர்வு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.