நகை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இதுதான் சரியான சான்ஸ்! வாரத்தின் முதல்நாளே விலை சரிவு
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (டிசம்பர் 29) குறைந்துள்ளது. திங்கட்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 குறைந்து ₹13,020 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,04,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 குறைந்து ₹14,204 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 குறைந்து ₹1,13,632 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹85 குறைந்து ₹10,865 ஆகவும், ஒரு சவரன் ₹680 குறைந்து ₹86,920 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹4 குறைந்து ₹281.00 ஆகவும், ஒரு கிலோ ₹4,000 குறைந்து ₹2,81,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு, தொழில்துறையில் வெள்ளியின் தேவை உயர்வு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.