Loading...
மீண்டும் மீண்டுமா? நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் மீண்டுமா? நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 அதிகரித்து ₹13,750 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 அதிகரித்து ₹1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 அதிகரித்து ₹15,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 அதிகரித்து ₹1,20,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹270 அதிகரித்து ₹11,565 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 அதிகரித்து ₹92,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT