இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும்... நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (டிசம்பர் 6) இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹40 அதிகரித்து ₹12,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹320 அதிகரித்து ₹96,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹44 அதிகரித்து ₹13,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹352 அதிகரித்து, ₹1,05,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹25 அதிகரித்து ₹10,040 ஆகவும், ஒரு சவரன் ₹200 அதிகரித்து ₹80,320 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹3 அதிகரித்து ₹199.00 ஆகவும், ஒரு கிலோ ₹3000 அதிகரித்து ₹1,99,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.