ஒரே நாளில் சவரனுக்கு ₹2,480 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (அக்டோபர் 31), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹310 குறைந்து ₹12,730 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,480 குறைந்து ₹1,01,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹338 குறைந்து ₹13,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,704 குறைந்து ₹1,11,104 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹251 குறைந்து ₹10,416 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,008 குறைந்து ₹83,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.