நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய தங்க விலையில் மாற்றமில்லை
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, வியாழக்கிழமை (அக்டோபர் 29), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,195 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,05,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹14,395 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,15,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று எந்தவித மாற்றமும் இல்லை.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10,796 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹86,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹215.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,15,000 ஆக விற்கப்படுகிறது.