NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு
    திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு

    திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், ஸ்ரீபெரம்புதூரிலுள்ள அதன் முதன்மை ஐபோன் அசெம்பிளி ஆலையில், திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

    பார்வதி மற்றும் ஜானகி ஆகிய இரு சகோதரிகளுக்கு திருமணம் நடைபெற்றதை காரணமாக கூறி மார்ச் 2023இல் தொழிற்சாலையில் வேலை நேர்காணல் மறுக்கப்பட்ட பின்னர் இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

    திருமணமாகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பாரபட்சமான நடைமுறை இருப்பதாக கூறப்படுகிறது.

    விதிகள்

    Foxconn இன் பணியமர்த்தல் நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன

    ஃபாக்ஸ்கான் இந்தியாவின் முன்னாள் மனித வள நிர்வாகி எஸ். பால் கருத்துப்படி, நிறுவனத்தின் மேலிட நிர்வாகிகள் இந்த பாரபட்சமான பணியமர்த்தல் விதிகளை, அதன் இந்திய HR நிறுவனங்களுக்கு வாய்மொழியாகவே தெரிவிக்கின்றனர்.

    கலாச்சார சிக்கல்கள், திருமணத்திற்குப் பிந்தைய பல சிக்கல்கள், பிரசவம் போன்றவை மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக திருமணமான பெண்களை பணியமர்த்துவதை ஃபாக்ஸ்கான் பொதுவாக தவிர்க்கிறது.

    கூடுதலாக, திருமணமான இந்துப் பெண்கள் அணியும் பாரம்பரிய நகைகளான மெட்டி மற்றும் தாலி, ஐபோன் கூறுகளை சேதப்படுத்தும் மின்னியல் வெளியேற்றத்திற்கான சாத்தியமான ஆபத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கூற்றை பல Foxconn பணியமர்த்தல் முகமைகளைச் சேர்ந்த 17 பணியாளர்களும், நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் மனித வள நிர்வாகிகளும் உறுதிப்படுத்ததினர்.

    விதிவிலக்குகள்

    ஃபாக்ஸ்கானின் பாரபட்சமான பணியமர்த்தல் நடைமுறைகளுக்கு விதிவிலக்குகள்

    பாரபட்சமான பணியமர்த்தல் நடைமுறைகள் இருந்தபோதிலும், ஃபாக்ஸ்கான் இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிப்பதில்லை.

    மூன்று முன்னாள் Foxconn HR நிர்வாகிகள், அதிக உற்பத்தி மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையின் போது, ​​​​நிறுவனம் திருமணமான பெண்களை பணியமர்த்துவதில் அதன் நிலைப்பாட்டை தளர்த்தியது எனக்கூறினர்.

    சில சந்தர்ப்பங்களில், ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு, அவர்களது திருமண நிலையை மறைப்பதற்கும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு உதவுகிறார்கள்.

    பதில்

    ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளன

    குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய இரண்டும் 2022 இல் தங்கள் பணியமர்த்தல் நடைமுறைகளில் குறைபாடுகளை ஒப்புக்கொண்டன.

    இருப்பினும், திருமணமான பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான 2023 மற்றும் 2024 நிகழ்வுகளை அவர்கள் குறிப்பிடவில்லை.

    இந்தியச் சட்டம், திருமண நிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்யவில்லை என்றாலும், இரு நிறுவனங்களின் கொள்கைகளும் அத்தகைய நடைமுறைகளைத் தடுக்கின்றன.

    "2022 ஆம் ஆண்டில் பணியமர்த்தல் நடைமுறைகள் பற்றிய கவலைகள் முதன்முதலில் எழுப்பப்பட்டபோது, ​​நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். ஃபாக்ஸ்கான் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து சப்ளையர்களும் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்" என்று ஆப்பிள் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    திருமணங்கள்

    சமீபத்திய

    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்

    ஆப்பிள்

    உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்?  ஊட்டச்சத்து
    எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு இந்தியா
    ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் டாடா
    ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள் ஐபோன்

    திருமணங்கள்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா பாலிவுட்
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!! கிரிக்கெட்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025