LOADING...
அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2025
06:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியாளர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் பேசுகையிலே, இந்த வரி விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். "மத்திய அரசின் சார்பில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களுடன் நான் நேரடியாக பேசியுள்ளேன். டெல்லியிலும் அவர்கள் என்னை சந்தித்தனர். ஏற்கனவே கோவிட் காலத்திலும், தொழிலாளர்களும், தொழில்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திட்டங்களை செயல்படுத்தியதை போலவே, தற்போது ஏற்பட்டுள்ள வரி பிரச்சினையிலும் அரசு முழுமையாக செயல்படுகிறது" என்றார் அவர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உதவித் திட்டம்

நஷ்டமடைந்த வணிகர்களுக்கு உதவித் திட்டம் உறுதி

அமைச்சர் மேலும், "அமெரிக்காவின் இந்த வரியால் பாதிக்கப்படும் அனைவருக்கும் நாங்கள் தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இதற்கான தீர்வை விரைவில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக அமெரிக்காவின் இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல அறிவிப்பு சீக்கிரத்தில் வரும். வரியால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும்" என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சில முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பை அறிவித்திருந்தார். இது, குறிப்பாக இந்திய வணிகர்கள் மற்றும் தொழில்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில் நிதியமைச்சரின் கருத்து வணிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.