இனி பாஸ்வேர்ட் தேவையில்லை; வாட்ஸ்அப்பிலேயே PF பேலன்ஸ் பார்க்க புதிய சேவை; எப்படி பயன்படுத்துவது?
செய்தி முன்னோட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது 74-வது நிறுவன தினத்தில் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 8 கோடிக்கும் அதிகமான தீவிர பிஎஃப் (PF) சந்தாதாரர்கள் தங்களின் கணக்கு விவரங்களை மிக எளிதாக சரிபார்க்க முடியும். இனி பிஎஃப் போர்ட்டலில் லாக்-இன் செய்யாமலும், பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்ளாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்கள் இங்கே:-
பிராந்திய மொழிகள்
10 வட்டார மொழிகளில் சேவையைப் பெறும் வசதி
இந்த புதிய வாட்ஸ்அப் சேவையின் முக்கிய அம்சமாக, சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியிலேயே தகவல்களை பெற முடியும்.
தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 10 பிராந்திய மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இதனால் ஆங்கிலம் தெரியாத கிராமப்புற ஊழியர்களும் மற்றவர்களின் உதவியின்றி தங்களது பிஎஃப் கணக்கு விவரங்களை தங்களது தாய்மொழியிலேயே மிக எளிதாகப் புரிந்துகொண்டு அறிந்துகொள்ள முடியும்.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் மூலம் பிஎஃப் பேலன்ஸ் சரிபார்க்கும் படிநிலைகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8796441800 என்ற எண்ணை சேமித்து 'Hi' என மெசேஜ் அனுப்ப வேண்டும்.
பின்னர் திரையில் தோன்றும் மெனுவில் உங்களது விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் Check Balance, Last 5 Transactions அல்லது Passbook ஆகிய விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியைப் பதிவிட்டு கணக்கு விவரங்களை உடனடியாகப் பெறலாம்.
நன்மைகள்
PMVBRY உதவி மற்றும் பிற நன்மைகள்
பிஎஃப் இருப்புத் தொகை மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்ப்பதோடு, PMVBRY திட்டத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் இந்த சேவை வழங்குகிறது.
மேலும், நிறுவனத்தின் பங்களிப்புத் தொகை கணக்கில் சேர்ந்துள்ளதா என்பதை ஊழியர்கள் உடனுக்குடன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எளிய டிஜிட்டல் முயற்சி பிஎஃப் சந்தாதாரர்களின் அன்றாட சிரமங்களைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
On occasion of EPFO Foundation Day, EPFO Services on WhatsApp were launched by Dr.@mansukhmandviya
— EPFO (@officialepfo) November 1, 2026
, Hon. Union Minister for Labour and Employment and Youth Affairs and Sports, marking another significant milestone in EPFO’s digital journey #EPFOat74 #EPFOServicesOnWhatsapp pic.twitter.com/40YFLrswKF