LOADING...
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது

AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
02:50 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது. இந்தியாவில் "AI-ஆல் வேலைவாய்ப்புகள் அழியும் (Job Apocalypse)" என்ற கூற்றிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியிலும், சில குறிப்பிட்ட வேலைகளை செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் செய்ய முடியாது என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வேலைகள்

AI-ஆல் அசைக்க முடியாத வேலைகள்

பராமரிப்பு மற்றும் நர்சிங்: முதியோர் பராமரிப்பு, குழந்தைகள் காப்பகம், செவிலியர் பணி மற்றும் மனநல ஆலோசனை போன்ற மனித உணர்வுகளும், இரக்கமும் தேவைப்படும் பணிகளில் AI-ஆல் மனிதர்களுக்கு மாற்றாக செயல்பட முடியாது. கைவினை மற்றும் தொழில்நுட்ப பணிகள்: பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கட்டுமானம், பழுதுபார்த்தல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற உடல் உழைப்பும், அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் திறனும் தேவைப்படும் வேலைகள். கல்வி மற்றும் வழிகாட்டுதல்: ஆரம்ப காலக் கல்வி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி போன்ற நம்பிக்கையும், தனிப்பட்ட கவனிப்பும் தேவைப்படும் துறைகள். சமையல் மற்றும் படைப்பாற்றல்: சமையல் கலை மற்றும் பேக்கிங் போன்ற படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் AI-ஆல் மனிதர்களின் நுணுக்கமான சுவை மற்றும் கலைத்திறனை ஈடுகட்ட முடியாது.

எச்சரிக்கை

AI மாற்று அல்ல; நிகர வேலைகளை உருவாக்கும் ஆதாரம்

தரவுகளை செயலாக்குவதிலும், திரும்ப திரும்ப செய்யப்படும் பணிகளை தானியக்கமாக்குவதிலும் AI சிறந்து விளங்கினாலும், கட்டமைக்கப்படாத, பச்சாதாபம் கொண்ட மற்றும் ஆக்கப்பூர்வமாக நுணுக்கமான வேலைகளில் அது தடுமாறுகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. இதை அங்கீகரித்து, அதனால் ஒயிட் காலர்(White-collar) வேலைகளை தாண்டி, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன் சார்ந்த வேலைகளை "கௌரவமான மற்றும் நாகரீகமான" வேலைகளாக இளைஞர்கள் கருத வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இந்தியா தனது மக்கள் தொகை பலனை அறுவடை செய்ய ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. AI அபாயங்களை முன்வைக்கிறது, ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டால், அது இடையூறுக்கு பதிலாக நிகர வேலை உருவாக்கத்திற்கான ஆதாரமாக மாறும் என்கிறது அறிக்கை

Advertisement