அமெரிக்காவில் பைஜூஸ் வழக்கில் புதிய திருப்பம்.. 533 பில்லியன் டாலர்களை மறைத்திருக்கிறதா பைஜூஸ்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னாள் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்பான பைஜூஸூக்கும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களுக்குமிடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக, அந்நிறுவனம் வாங்கிய 1.2 பில்லியன் டாலர்களுக்கு கடனுக்கு ஈடான 533 மில்லியன் டாலர்கள் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் பைஜூஸூக்குக் கடன் வழங்கியவர்கள்.
மேலும், இந்தப் பணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கேம்ஷேப்ட் கேப்பிட்டல் ஃபண்டு என்ற முதலீட்டு நிறுவனத்திற்கு பைஜூஸ் கடந்த ஆண்டு கையாற்றியதாகவும் அவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கேம்ஷேப்ட் கேப்பிட்டல் ஃபண்டு நிறுவனமானது 23 வயதேயான வில்லியம் மார்ட்டர் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனம். முதலீடு தொடர்பான விஷயங்களில் இவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
நம்பகமான நிறுவனமா கேம்ஷேப்ட் கேப்பிடல்?
பைஜூஸூக்குத் தாங்கள் கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இருக்கும் கடன் வழங்கியவர்கள், பைஜூஸ் அந்த 533 மில்லியன் டாலர்களை மறைத்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
2020ம் ஆண்டு அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம், அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரியிலேயே தாங்கள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது கேம்ஷேப்ட் கேப்பிடல்.
ஆனால், அந்நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் வேறு ஒரு உணவகம் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்வு கேம்ஷேப்ட் கேப்பிடல் மீதான நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்புவதோடு, அதனுடன் தொடர்பு படுத்தப்படும் பஜூஸின் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பைஜூஸ்
பைஜூஸ் வழக்கு:
2021-ம் ஆண்டு உலகளவில் ஆன்லைன் கல்வி சேவை வழங்கும் நிறுவனங்களின் தேவை மிக அதிகமாக இருந்தது.
அந்த நேரத்தில் மிகவும் மதிப்பு மிக்க எடூடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாகப் பார்க்கப்பட்ட பைஜூஸ் அமெரிக்காவின் சில கடன் வழங்குநர்களிடமிருந்து 1.2 பில்லியன் டாலர்களைக் Term Loan B முறையில் கடனாகப் பெற்றிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மேற்கூறிய கடனுக்கான 40 மில்லியன் டாலர்கள் வட்டியை பைஜூஸ் நிறுவனம் செலுத்தவில்லை. கடன் வழங்கியவர்கள் தவறான வழிமுறைகளப் பின்பற்ற, தான் கைப்பற்றிய துணை நிறுவனங்களை அபகரிக்க முயல்வதாக அமெரிக்காவில் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது பைஜூஸ்.
அந்த வழக்கிலேயே தற்போது புதிய திருப்பமாக, பைஜூஸ் மீது மேற்கூறிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள் கடன் வழங்கியவர்கள்.