NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஐந்து ஆண்டுகளில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐந்து ஆண்டுகளில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
    ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு

    ஐந்து ஆண்டுகளில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    07:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த போலி நோட்டுகளின் எண்ணிக்கை 317% அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    நிதியாண்டு 19 இல் 21.87 மில்லியன் கள்ள நோட்டுக்களில் இருந்து நிதியாண்டு23 க்குள் 91.11 மில்லியன் கள்ள நோட்டுக்களாக அதிகரித்துள்ளது.

    இருப்பினும், நிதியாண்டு24 இல் 85.71 மில்லியன் கள்ள நோட்டுகள் என்ற எண்ணிக்கையுடன் ஒரு சிறிய சரிவு காணப்பட்டது.

    குறிப்பிடத்தக்க வகையில், நிதியாண்டு22 கள்ள ரூபாய் 500 நோட்டுகளின் ஆண்டு உயர்வைக் கண்டது.

    நிதியாண்டு21 இல் 39.45 மில்லியனில் இருந்து 79.67 மில்லியனாக எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இது 102% என்ற கூர்மையான உயர்வாகும்.

    ₹2,000 நோட்டுகள்

    ₹2,000 கள்ள நோட்டுகளின் அதிகரிப்பு

    நிதியாண்டு24 இல் போலி ₹2,000 நோட்டுகள் 166% உயர்வைக் கண்டன. இது நிதியாண்டு23 இல் 9.81 மில்லியனில் இருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் 26.04 மில்லியனாக உயர்ந்துள்ளது.

    போலியான ₹500 மற்றும் ₹2,000 நோட்டுகள் பெருமளவில் அதிகரித்த போதிலும், அனைத்து மதிப்புகளிலும் கள்ள நோட்டுகள் 30% குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறியது.

    ஒட்டுமொத்தமாக, நிதியாண்டு19 இல் 317.38 மில்லியனாக இருந்த போலி நோட்டுகளின் எண்ணிக்கை நிதியாண்டு24 க்குள் 222.64 மில்லியனாகக் குறைந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி மே மாதம், மொத்த புழக்கத்தில் உள்ள ₹500 கரன்சி நோட்டுகளின் பங்கு மார்ச் 2024 இன் இறுதியில் 86.5% ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 77.1% ஆக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    இந்தியா

    பிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம் நரேந்திர மோடி
    தேசிய பத்திரிக்கை தினம் 2024: ஊடக சவால்கள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு மத்திய அரசு
    ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை கேரளா
    அடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது சுஸூகி சுஸூகி

    மத்திய அரசு

    இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம் இந்தியா
    இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் மெட்ரோ
    பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து; மொத்தம் எத்தனை செம்மொழிகள் உள்ளன? அமைச்சரவை
    ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா

    வணிக புதுப்பிப்பு

    மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்; தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு தங்க விலை
    உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம் மத்திய அரசு
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி இந்தியா
    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை

    வணிக செய்தி

    160 ஆண்டுகளில், HSBC இன் முதல் பெண் CFO- பாம் கவுர் வணிகம்
    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச்  செபி
    இப்போது ₹2,999க்கு மேல் Blinkit-இல் ஆர்டர் செய்தால், EMI ஆப்ஷன் உண்டு; எப்படி பயன்படுத்துவது? வணிகம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025