NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    உயர்த்தப்பட்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: கடைகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரூ.209 உயர்த்தப்பட்டுள்ளது.

    பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள்(OMCs) இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    ஒரு மாதத்திற்கு முன், 19 கிலோ வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை 158 ரூபாய் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கடைகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாதாந்திர திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

    எனவே, உயர்த்தப்பட்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    தக்ஜபிக்

    வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் திருத்தப்பட்ட விலைகள்:

    டெல்லி- ரூ 1,731.50

    மும்பை- ரூ 1,684

    லக்னோ- ரூ 1,845

    சென்னை- ரூ.1,898

    பெங்களூரு - ரூ 1,813

    கொல்கத்தா- ரூ 1,839

    ஒரு மாதத்திற்கு முன்பு , வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    "வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பயனர்களுக்கும் நம் நாட்டுப் பெண்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் பரிசு இது" என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அப்போது கூறி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    இந்தியா

    சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களையா இந்தியாவில் விற்பனை செய்கிறது ஆப்பிள்? ஆப்பிள்
    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் ஜஸ்டின் ட்ரூடோ
    இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா கார்
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025