வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
செய்தி முன்னோட்டம்
வணிக பயப்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து தற்போது ரூ.1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் உள்ள கச்சா விலையின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றம் அடையும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படும்.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர், ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று, மார்ச் 1ம் தேதி சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்ந்து ரூ.1,960.50 விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
ட்விட்டர் அஞ்சல்
சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) March 1, 2024
19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1960 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை#GasCylinderPrice #ThanthiTv pic.twitter.com/fvy5wUaAVc