LOADING...
இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது

இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
04:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. 'அல் ஹிந்த் ஏர்' (Al Hind Air) மற்றும் 'ஃபிளை எக்ஸ்பிரஸ்' (FlyExpress) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது சேவையை தொடங்க மத்திய அமைச்சகத்திடம் இருந்து 'தடையின்மை சான்றிதழ்' (NOC) பெற்றுள்ளன.

தகவல்கள்

புதிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள்

அல் ஹிந்த் ஏர்(Al Hind Air): கேரளாவை சேர்ந்த 'அல் ஹிந்த்' குழுமத்தால் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இது கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். ஆரம்பத்தில் ATR 72-600 ரக விமானங்களை கொண்டு உள்நாட்டு சேவைகளை தொடங்கும் இந்த நிறுவனம், எதிர்காலத்தில் சர்வதேச விமான சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. ஃபிளை எக்ஸ்பிரஸ்(FlyExpress): இந்த நிறுவனமும் தனது சேவைகளை தொடங்க தேவையான அனுமதியை பெற்றுள்ளது. இதுவும் பிராந்திய விமானப் போக்குவரத்தில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்க் ஏர்(Shankh Air): இவற்றுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 'சங்க் ஏர்' நிறுவனமும் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 2026-ம் ஆண்டு முதல் தனது விமானச் சேவையைத் தொடங்கும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

முக்கியத்துவம்

இண்டிகோ குழப்பத்திற்கு இடையே புதிய விமான நிறுவனங்கள் களமிறங்குகின்றன

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இந்திய வான்வெளியில் புதிய நிறுவனங்கள் வருவதை ஊக்கப்படுத்துவதே அமைச்சகத்தின் நோக்கம். 'உடான்' (UDAN) போன்ற திட்டங்கள் சிறிய விமான நிறுவனங்கள் பிராந்திய அளவில் வளர்வதற்குப் பெரும் உதவியாக உள்ளன." தற்போது இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குழுமங்கள் மட்டுமே சுமார் 90% பங்குகளை கொண்டுள்ளன. இந்த 'இரட்டை ஆதிக்கம்' (Duopoly) காரணமாக விமான கட்டணங்கள் உயர்வதாகவும், சேவை பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. புதிய நிறுவனங்களின் வருகை ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, பயணிகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement