மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வு காரணமாக உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்? கணக்கீடு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய உயர்வு மூலம் தற்போதைய அகவிலைப்படி விகிதம் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, 3% கூடுதல் உயர்வு என்பது அடிப்படைச் ஊதியத்தில் 3 சதவீத தொகையைக் கூடுதல் சம்பளமாக வழங்கும்.
ஊதிய உயர்வு
பல்வேறு அடிப்படை ஊதியங்களுக்கான கூடுதல் உயர்வு அட்டவணை
ரூ. 18,000 (குறைந்தபட்ச ஊதியம்): மாதத்திற்கு ரூ. 540 கூடுதலாகக் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ. 6,480 கூடுதல் பலன்.
ரூ. 30,000 அடிப்படை ஊதியம்: மாதத்திற்கு ரூ. 900 கூடுதல் உயர்வு.
ரூ. 40,000 அடிப்படை ஊதியம்: மாதத்திற்கு ரூ. 1,200 கூடுதல் உயர்வு.
ரூ. 56,100 அடிப்படை ஊதியம்: மாதத்திற்கு ரூ. 1,683 உயர்ந்து, ஆண்டுக்கு ரூ. 20,196 வரை கூடுதல் பலன் கிடைக்கும்.
நிலுவைத் தொகை
4 மாத நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1, 2026 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.
இதன் காரணமாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 4 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறத் தகுதியானவர்கள்.
உதாரணமாக, ரூ.18,000 அடிப்படை ஊதியம் வாங்குபவர்களுக்கு 4 மாத நிலுவைத் தொகையாக ரூ. 2,160 மொத்தமாகக் கிடைக்கும்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஆண்டிற்கு இருமுறை இந்த அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.