LOADING...
பங்குச் சந்தை வரி குறையுமா? பட்ஜெட் 2026 இல் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்
பட்ஜெட் 2026 இல் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்

பங்குச் சந்தை வரி குறையுமா? பட்ஜெட் 2026 இல் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 18, 2026
07:36 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் (Brokerages) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வரி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போலச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை

நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) சலுகை

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மிக முக்கியமான கோரிக்கை நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) தொடர்பானதாகும். தற்போது 1.25 லட்சம் ரூபாய்க்கு மேல் ஈட்டும் லாபத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று ஜே.எம்.பினான்சியல் சர்வீசஸ் பரிந்துரைத்துள்ளது. இது நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்ய ஊக்கமளிக்கும் என்று கருதப்படுகிறது.

வரையறை

நீண்ட கால முதலீட்டிற்கான சீரான வரையறை

தற்போது பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட கால முதலீடு என்பதற்கான கால அளவு மாறுபடுகிறது. இதனை அனைத்துச் சொத்துகளுக்கும் சீராக 12 மாதங்கள் (1 வருடம்) என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது வரி முறையை எளிதாக்குவதுடன், முதலீட்டாளர்களுக்குத் தெளிவான புரிதலை வழங்கும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

எஸ்டிடி

எஸ்டிடி (STT) உயர்வைக் தவிர்க்கக் கோரிக்கை

பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்படும் பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) இனிமேல் உயர்த்தப்படக் கூடாது என்று முதலீட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். டெரிவேட்டிவ் (Derivatives) வர்த்தகத்தை விட ரொக்கச் சந்தை (Cash Market) வர்த்தகத்திற்கு இந்த வரியைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. இது ஊக வர்த்தகத்தைக் குறைத்து, உண்மையான முதலீடுகளை அதிகரிக்க உதவும்.

Advertisement

கோரிக்கைகள்

மற்ற முக்கிய கோரிக்கைகள்

பங்குச் சந்தை சார்ந்த மற்ற சில முக்கிய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு: பங்கு திரும்பப் பெறுதல் (Buyback): பங்குகளைத் திரும்பப் பெறும்போது கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்க வேண்டும். டிவிடெண்ட் வரி: உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான டிவிடெண்ட் வரி விகிதத்தை என்ஆர்ஐ முதலீட்டாளர்களுக்கு இணையாகச் சீரமைக்க வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தக் கூடாது. இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பாக அமையும்.

Advertisement