Page Loader
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2024
03:25 pm

செய்தி முன்னோட்டம்

வங்கி அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அபராதம் விதிப்பது தொடர்பான புதிய விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திங்களன்று இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால்(என்பிஎஃப்சி) கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும். தற்போது, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வருவாயை அதிகரிப்பதற்காக கடன் செலுத்த தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. இந்த அபராதங்கள் குறித்து கவலை கொண்ட ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இதற்கான விதிமுறைகளை திருத்தியது.

டஜஹ்வ்பிக் 

 ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் கால அவகாசம் 

அந்த திருத்தத்திற்கு பிறகு, வங்கிகள் அல்லது என்பிஎஃப்சிகள் 'நியாயமான' இயல்புநிலை கட்டணங்களை மட்டுமே விதிக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கிகள், என்பிஎஃப்சிகள் மற்றும் பிற ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு இந்த திருத்தப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்த ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், ஏப்ரல் 1, 2024க்கு முன் வழங்கப்பட்ட கடன்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய அபராதக் கட்டண முறையில் செய்யப்பட இருக்கும் மாற்றம் வரும் ஜூன் மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.