LOADING...
நேரடி விற்பனையைத் தொடங்கியதன் மூலம் இந்தியாவின் ஆப்பிள் விற்பனை ₹9 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை
இந்தியாவின் ஆப்பிள் விற்பனை ரூ.9 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை

நேரடி விற்பனையைத் தொடங்கியதன் மூலம் இந்தியாவின் ஆப்பிள் விற்பனை ₹9 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2025
07:29 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம், கடந்த நிதியாண்டில் இந்தியாவில் தனது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சுமார் $9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 13% அதிகமாகும். சீனாவின் கடுமையான போட்டி மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள சவால்களுக்கு மத்தியில், இந்தியாவின் இந்த விற்பனை ஆப்பிளுக்கு ஒரு முக்கிய உந்துதலை அளித்துள்ளது. இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஐபோன்கள் மற்றும் மேக்புக் சாதனங்களுக்கான தேவை அதிகரித்ததுதான். இந்தியாவின் முக்கிய சந்தைகளில் தங்களது சில்லறை வர்த்தகத்தை ஆப்பிள் நிறுவனம் விரிவாக்கி வருகிறது.

விரிவாக்கம்

புதிய கடைகள் திறப்பு

சமீபத்தில், பெங்களூர் மற்றும் புனேவில் இரண்டு புதிய கடைகளைத் திறந்தது. மேலும், நொய்டா மற்றும் மும்பையில் புதிய கடைகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம், நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை ஒரு தனி விற்பனைப் பகுதியாக மாற்றியமைத்தது. அதிகரித்து வரும் வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கம் காரணமாக, இந்தியா எதிர்காலத்தில் ஒரு முக்கிய சந்தையாக மாறும் என ஆப்பிள் கருதுகிறது. மேலும், இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், தள்ளுபடிகள், பழைய சாதனங்களை மாற்றிக் கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் வங்கி சலுகைகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் ஆப்பிள் விற்பனையை அதிகரிக்க முயன்று வருகிறது.